கோபி,அளுக்குளி அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி உடனாய ஶ்ரீ பொன்னேந்தி நாராயணப்பெருமாள் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது

 

கோபி,அளுக்குளி அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி உடனாய ஶ்ரீ பொன்னேந்தி நாராயணப்பெருமாள் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்,கோபி அருகே உள்ள அளுக்குளிஅருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி உடனாய ஶ்ரீ பொன்னேந்தி நாராயணப்பெருமாள் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவானது 



அளுக்குளி, அலிங்கியம் உட்பட 33 ஊர் பொதுமக்கள் சார்பில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.மாசி 1ஆம் தேதி தனபூஜை மகாலட்சுமி ஹோமம் கோ பூஜை,வாஸ்து சாந்தி அக்னிகாரிய யாகசாலையில் முதல் கால வேள்வியுடன் தொடங்கி, மாசி 2ந் தேதி,பழவர்கங்கள் ஹோமம்,பூர்ணாகுதி,அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல்,இன்று மாசி 3ந் தேதி (15. 2. 2024) காலை திருப்பள்ளி எழுற்சி,பெருமாளுக்கு காப்பு அணிவித்தல், தீபாராதனை தொடர்ந்துயாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு அனைத்து விமானங்களுக்கும் சமகால கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு  ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன்னேந்தி நாராயண பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 



இதில் திருப்பணி குழு தலைவர் கே.எம். வெங்கடேஸ்வரன்,முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன், யூனியன் சேர்மன் வக்கில் மெளதீஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாண்டுரங்கசாமி, திருப்பணி குழு உறுப்பினர்கள் ஶ்ரீதர், ரகு, ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிநாதன், தம்பி சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post