திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த விழாவுக்கு இ.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
உஷா தியேட்டர் அருகில் உள்ள அண்ணமார் கோவிலில் இருந்து பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சக்திவேல்கள், முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வந்தார்கள். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக கும்பஸ்தானம், யாகபூஜைகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து நான்காம் நாள் நிகழ்ச்சியாக யாகபூஜைகளும், தொடர்ந்து யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு வந்தன. இதையடுத்து கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை கோகுல் சிவம் நடத்தி வைத்தார். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.