கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த மாணவிகள் மற்றும் குழந்தைகள் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழகுத் துறை இணைந்து இவான்ஸா 24 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சி துவக்க விழாவில் கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்..சிறப்பு விருந்தினராக பெங்களுருவை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீனு பிள்ளை கலந்து கொண்டு பேசுகையில்,தற்போது ஆடை வடிவமைப்பு துறையில் நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும்,குறிப்பாக இளம்பெண் தொழில் முனைவோர்களாக இதில் பெண்கள். சாதித்து வருவதாக கூறினார்..நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் யசோதா, டீன் சாந்தா,துறை தலைவர் ராதிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,ஆடை வடிவமைப்பு துறையை சேர்ந்த மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு அணிவிக்கப்பட்டு ஆடை அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள்,மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர்..