இ.பி.எப் 95 பென்சனர்களுக்கு ரூபாய் 9000 பஞ்சப்படியுடன் வழங்கிடுகுவும், இடைக்காலமாக 2013ம் ஆண்டு அமை க்கப்பட்ட,பகத்சிங்கோஷாரியா கமி ட்டியின் பரிந்துறையின் அடிப்படை யில் ரூபாய் 3000 பஞ்சப்படியுடன் உடனே வழஙகக் கேட்டும், பென்சனர் களுக்கு காப்பீட்டுத் திட்டமாக இ.எஸ். ஐ திட்டத்தை அமல்படுத்தவும், உச்ச நீதிமன்றம் 4.11.2022ல் வழங்கிய தீர் ப்பின் அடிப் படையில் உயர் பென்சன் வழங்க வேண்டும் எனவும்,.மூத்த குடி மக்களுக்கு பறிக்கப்பட்ட இரயில் கட்டண சலுகையை மீண்டும் அமல் படுத்த கேட்டும்,தமிழக அரசே. கேர ளம், பாண்டிச்சேரி அரசுகள் போல சமூக பாதுகாப்பு பென்சனாக மாதம் ரூ.2000வழங்கிடுக எனவும் 60 வயது க்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கிடுக என கேட்டு,கோவை பெரிய நாயக்கன் பாளையம் பேருந்து நிலையம் அரு கில் (ஸ்ரீராம் திரையரங்கு முன்பு) சங்கத்தின் மாவட்ட துணைச் செய லாளர் வி.சின்னசாமி தலைமையில். ,புஷ்பராஜன்,கே.குமாரசாமி, நடேசன் ஆகியோர் முன்னிலையில்,மாநில க்குழு உறுப்பினர் ஆர். செல்வராஜ், அகில இந்தியக் குழு உறுப்பினர் ஏ. ஆர்.துரைசாமி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி சிறப்புரையாற்றி னர்.நிறைவாக,சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.ஆர்.மணி நன்றி யுரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட.இபிஎப்- 95 பென் சர்தாரர்கள் கலந்து கொண்டு,கோரி கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.