ஈரோடு மாவட்டம்,, நீலகிரி நாடாளு மன்றத் தொகுதி, பவானிசாகர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சை புளி யம்பட்டி நகராட்சி பகுதியில்,திமுகழக துணை பொதுச்செயலாளரும், நீல கிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா எம்.பி.கீழ்க்கண்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, வளர்ச்சி பணிகளை துவக்கி வைத் தார். முதலில், பள்ளி மேம்பாட்டு மானியம்- மூலதன பணி - 2023-2024ன் கீழ் வார்டு எண்.09 ஜவஹர் மெயின் ரோடு நகராட்சி துவக்க பள்ளியில், (காவல் நிலையம் அருகில்) ரூ.83.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை கட்டுதல் பணிக்கு அடிக்கல் நாட்டியும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2021-2022ன் கீழ் வார்டு எண் 07 காளமேகம் வீதியில் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுதல் பணி க்கு. அடிக்கல் நாட்டியும் மொத்தம் ரூ. 95 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், உடன், திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்ல சிவம்,நகர்மன்ற தலைவர் தி.ஜனார்த் தனன், நகர்மன்ற துணைத் தலைவர் பி.ஏ. சிதம்பரம் நகரப் பொறியாளர்,, திமு கழக மாநில, மாவட்ட, நகர நிர் வாகி கள், பொதுமக்கள்,அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் திமுக வினர் கலந்து கொண்டனர்.