தூத்துக்குடியில் லிப்ட் கேட்டு பணம் பறிப்பு: தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கூகுள்பே மூலம் ரூ.75ஆயிரம் மற்றும் செல்போனை பறித்த இளஞ்சிறார் உட்பட 4பேர் கைது!

தூத்துக்குடியில் லிப்ட் கேட்டு பணம் பறிப்பு: தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கூகுள்பே மூலம் ரூ.75ஆயிரம் மற்றும் செல்போனை பறித்த இளஞ்சிறார் உட்பட 4பேர் கைது!

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கூகுள்பே மூலம் ரூ.75ஆயிரம் மற்றும் செல்போனை பறித்த இளஞ்சிறார் உட்பட 4பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சிலுவைபட்டி ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் மகன் அந்தோணி ரிக்சன் (21). இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஜவுளிக்கடைக்கு சென்றுவிட்டு பைக்கில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் தன்னை ஸ்டேட் பாங்க் காலனியில் விடுமாறு லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து ரிக்சன் அந்த நபரை பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார். 

ஸ்டேட் பாங்க் காலனி அருகே வந்தபோது, அங்கு மறைந்திருந்த 3பேர் மற்றும் லிப்ட் கேட்டு வந்த வாலிபர் ஆகிய 4பேரும் சேர்ந்து ரிக்சனை அடித்து உதைத்து பீர் பாட்டிலால் தாக்கி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் அவரது செல்போனை பிடுங்கி, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.74,500 பணத்தை குகூள்பே மூலம் எடுத்துள்னர். பின்னர் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். 

இதில் காயம் அடைந்த ரிக்சன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மதியழகன் மகன் முத்துசெல்வம் (21), 3 செண்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் சகாயராஜா (22), ஸ்டாலின் மகன் சஞ்சய் (20), மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகிய 4பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து பணம், செல்போன் மீட்கப்பட்டது.  

செய்தியாளர்- அஹமத்

புகைப்படம் - சித்திக்

 

Previous Post Next Post