தமிழக வெற்றிக் கழகம் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக 66 வது இடமாக ரொட்டி முட்டை பால் திட்டம் மற்றும் ஐந்தாவது பயிலகம் துவங்கப்பட்டது..
தமிழக வெற்றி கழகம் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக தொடர்ந்து பொள்ளாச்சி கிணத்துகடவு வால்பாறை என பல்வேறு இடங்களில் கல்வி உதவி தொகை மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்குவது, தளபதி பயிலகம், தளபதி விலையில்லா ரொட்டி முட்டை பால் திட்டம் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் புரம் பகுதியில் தொடந்து, 66 வது இடமாக ரொட்டி முட்டை பால் திட்டம் மற்றும் ஐந்தாவது பயிலகம் துவங்கப்பட்டது...இதற்கான துவக்க விழாவில்,கோவை தெற்கு மாவட்ட தலைவர் கோவை K.விக்னேஷ் தலைமை தாங்கினார்...
கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் S.பாபு முன்னிலை வகித்தார்.. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக. மாவட்ட செயலாளர் அருண்பாண்டியன் , மாவட்ட நிர்வாகிகள் உமாபதி , பாலா இளைஞரணி நிர்வாகிகள் மாரிராஜ் ,செந்தில் குமார் , சரவணன் , ரோஹித் , வினோத் ,சபரி , ஷெரிப் , அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..இந்நிகழ்ச்சியி்ல்,அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு ரொட்டி முட்டை பால் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக கோவை தெற்கு மாவட்ட பிள்ளையார்புரம் நிர்வாகிகள்,மகேந்திரன், உமையவன் செல்வம், ராஜன் , விக்னேஷ் குமார், ஆனந்த் குமார், சிவசுப்ரமணி , விஷ்வா , ராகவன், லோகேஷ் குமார், பிரகதீஷ், பாரதி , மோகன், ஹரி மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்....