கோவையில் நடைபெற்ற முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பில் 52 வருடம் கழித்து தங்களுக்கு சொல்லி கொடுத்த ஆசிரியர்களுடன் பழைய நினைவுகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்


கோவையில் நடைபெற்ற முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பில் 52 வருடம் கழித்து தங்களுக்கு சொல்லி கொடுத்த ஆசிரியர்களுடன் பழைய நினைவுகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். 

கோவை சிங்காநல்லூர் பகுதியில் தியாகி என்.ஜி.ஆர் நினைவு மேனிலைபள்ளி உள்ளது. இங்கு 1972ல் இருந்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பள்ளியில் பயின்று பல்வேறு நாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு பாடங்களை கற்று கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களை வரவழைத்து கௌரவப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர்.இதனையடுத்து முன்னாள் ஆசிரியர்கள், காலில் விழுந்து மாணவர்கள் நன்றி கூறி அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர் .
தொடர்ந்து மாணவர்கள் பள்ளி பருவ காலங்களில் செய்த தவறுகளை சுட்டக்காட்டி அதற்கான  தண்டனைகளை மீண்டும் ஆசிரியர்களை செய்து காண்பிக்க சொல்லி நினைவுகளை வெளிப்படுத்தினர்.மேலும் 52 வருடம் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள் ஒருகொருவர் கட்டி அணைத்து மகிழ்ச்சியை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் முன்னாள் மாணவர் மாணவர்களின் அசோசியேஷன் தலைவர் சீதாபதி, பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவன், முன்னாள் தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி,
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காவல் உதவி ஆணையர் சரவணன் கலந்து கலந்து கொண்டு சிறப்பித்தார் ,  மற்றும் முன்னாள் இன்னாள் ஆசிரியர்கள்,மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post