ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட, நம்பியூர் மற்றும் பவானிசாகர் பகுதியின் பேரூர் கழக, ஒன்றிய செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பி எல் ஏ -2), வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்களின் தேர்தல் ஆலோசனைக்கூட்டம்
நம்பியூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டமானது நம்பியூர் ஒன்றிய செயலாளரும், பேரூராட்சி தலைவருமான மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில நெசவாளர் அணிச்செயலாளரும் , கோபி சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளருமான பி.சச்சிதானந்தம் வாக்குச்சாவடி நிலை முகவர்கள்(பி எல் ஏ -2) பணிகள் குறித்து ஆய்வு செய்தும், ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னிமலை, மாநில பொது குழு உறுப்பினர் கீதா முரளி,சரஸ்வதி பழனிசாமி,மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன்,மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் ப. அல்லாபிச்சை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர். பி. எஸ். பழனிசாமி, நம்பியூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் நந்தகுமார் செந்தில்குமார் ராஜேஸ்வரி நாகேஸ்வரி ராதா சண்முகம் பேரூர் கழக செயலாளர்கள் ஆனந்தகுமார்,சண்முகம்,பவானிசாகர் ஒன்றிய செயலாளர் காளியப்பன்,உட்பட வாக்குச்சாவடி ஒருங் கிணைப்பாளர்கள்,பேரூர் கழகப் பொறுப்பாளர்கள், வார்டுக் கழகச் செயலாளர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்துகொண்டனர்.