தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.!


தூத்துக்குடியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் வியட்நாம் நாட்டை சேர்ந்த வின் பாஸ்ட் நிறுவனத்தின் மின்சாரகார் தொழிற்சாலைக்கு முதல்வர்ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் தென் தமிழகத்தில் அமைக்கப்படும் முதல் கார் உற்பத்தி தொழிற்சாலையாக இது அமையவுள்ளது.

சென்னையில் கடந்த மாதம்உலக முதலீட்டாளர்கள் மாநாடுநடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் இரு நிறுவனங்கள், ரூ.26 ஆயிரம் கோடிமுதலீடு செய்ய தமிழக அரசுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.

நிறுவனம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதற்காக, தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கிவைத்தார். இதன் மூலம் முதற்கட்டமாக 3500 பேர் வேலை வாய்ப்பு பெறுவர் என தெரிய வருகிறது. முதற்கட்டமாக ரூ.3500 கோடியை முதலீடு செய்யும் இந்நிறுவனம் படிப்படியாக ரூ.16 ஆயிரம் கோடியை முதலீடு செய்யும் வகையில் கடந்த மாதம் நடைபெற்ற உலக மூதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெமுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தான 50 நாட்களில் தென் தமிழ் நாட்டின் முதல் மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டப்படுவது பொது மக்களிடையே பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நிகழ்ச்சியில் தொழிற்துறை அமைச்சர் அமைச்சர் TRB ராஜா, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா இராதா கிருஷ்ணன், வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஃபாம் சான் சாவ் (Pham Sanh Churc), சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடுமாநில அரசின் முத்த பிரதிநிதிகள் மற்றும் வின்ஃபாஸ்ட் ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக பிரதிநிதிகள் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்

தென் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட் Stute Industries Promotion Carporation of Tamil Nadu (Nircon தொழிற்பேட்டையில், 400 ஏக்கர் பரப்பளவில் வின் பாஸ்ட் நிறுவனத்தின் புதிய ஒருங்கிணைந்த மின்சார வாகன ஆலை கட்டப்படும் இந்த உற்பத்தி ஆலைத் திட்டத்தின் ஆரம்ப கட்ட முதலீடு 100 மில்லியன் டாலர் ரூ 4000 கோடி ஆகும் இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

இந்த வரலாற்று மைல்கல் நிகழ்வு குறித்து வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஃபாம் சான் சாவ் (Pham Sanh Churc கூறுகையில் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் வின் பாஸ்ட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டுவிழா இந்தியாவில் நிலைத்து நீடிக்கத்தக்க நிலையான மற்றும் பசுமை போக்குவரத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மின்சார பொகம் உற்பத்தி நிறுவனத்தை தூத்துக்குடியில் அமைப்பதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கம் பசுமைப் போக்குவரத்து மற்றும் உத்திசார் ஒத்துழைப்பு ஆகியவற்றில் வின்ஃபாஸ்ட் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு மின்சார வாகனத் துறையில் ஒரு மிகப்பெரும் நிறுவனமாக வின் பாஸ்டின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த மைல்கள் நிகழ்வு வியட்நாம் மற்றும் இந்தியாவின் வலுவான பொருளாதாரங்களுக்கு இடையிலான உறவுகளையும், பிணைப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் கார்பன் வெளியேற்றம் இல்லாத பூஜ்ஜிய உமிழ்வு போக்குவரத்துடன் கூடிய எதிர்காலத்திற்கான வின்ஃபாஸ்டின் அர்ப்பணிப்பை இது எடுத்துக் காட்டுகிறது இந்த உற்பத்தி தொழிற்சாலை இந்தப் பகுதியில் பொருளாதார வளர்ச்சி, புதுமையான மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு களம் அமைக்கிறது" என்றார்.

தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் TRB ராஜா இது குறித்து கூறுகையில் " இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த மாபெரும் தொடக்கம், தமிழ்நாட்டின் முற்போக்கான தொழில்துறை கொள்கைகளை மீண்டும் உறுதிப்பட எடுத்துரைக்கிறது. மேலும் உலகளாவிய வாகன புதுமைக் கண்டுபிடிப்புச் சூழலுக்கும், உற்பத்திக்கும் தமிழ்நாட்டை மிகச்சிறந்த உற்பத்தி மையம் என மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் பங்கு அமைந்திருக்கிறது நாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விரும்பும் லட்சிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்ற இடமாக தமிழ்நாடு இருக்கும் மேலும் கார்பன் வெளியேற்றம் இல்லாத பூஜ்ஜிய உமிழ்வு போக்குவரத்தை எல்லோராலும் எளிதில் பெறக்கூடிய ஒன்றாக மாற்றுவதில் தமிழ்நாடு உறுதிபூண்டுள்ளது. இந்த திட்டம். தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த தொடக்கம் அதன் உலகளாவிய விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகன சந்தையான இந்தியாவில், மிக துரிதமாக வளர்ச்சிக்கண்டு வரும் மின்சார வாகனப் போக்குவரத்துப் பிரிவில் வேகமான வளர்ச்சியை எட்டுவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது தூத்துக்குடியில் அமையும் இந்த ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 150,000 கார்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது பெரும் பங்களிப்பதோடு 3,000 முதல் 3,500 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் இது வழங்கும் இந்நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே உள்ளூர்மயமாக்கலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் உலக அளவில் சிறந்த விநியோகத் தளத்துடன் இணைந்து செயல்படும்.

தமிழ்நாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதலீடு, வியட்நாமிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல். இந்நிறுவனத்தின் உலகளாவிய எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவை, தனது சர்வதேச சந்தை விரிவாக்கத்திற்கு ஒரு உந்துசக்தியாக இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விழா, உள்நாட்டிலும் உலக அளவிலும் விரைவான முறையில் பசுமை போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.

அதி நவீன உற்பத்தி ஆலையை கட்டமைப்பதோடு மட்டுமில்லாமல், ஒரு சந்தையில் வலுவான பிராண்ட் செயல்பாட்டை உருவாக்கவும், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை விரைவாகச் சென்றடையவும், நாடு தழுவிய விற்பனையாளர் (டீலர்ஷிப்) கட்டமைப்பை நிறுவ வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. வின்ஃபாஸ்ட் இந்திய சந்தையில் ப்ரீமியம் தரத்திலான தயாரிப்புகள், எல்லோரலும் வாங்குவதற்கு ஏற்ற போட்டித் தன்மையுடன் கூடிய விலையில் விற்பனை, விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் ஆகியவற்றை வழங்க உறுதிபூண்டுள்ளது. இது மின்சார வாகனப் போக்குவரத்தை பரவலாக சென்றடையும் தன்மை கொண்டதாக மாற்றும் மேலும் மின்சார வாகனம் என்றால் நாட்டில் மக்களுக்கு விருப்பமான மின்சார வாகன பிராண்டாக இது உருவெடுக்கும் உதவும்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் பற்றி அது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..

வின்குரூப்பின் அங்கமான வின்ஃபாஸ்ட் நிறுவனம் உலகளாவிய நவீன மின்சார வாகன புரட்சியை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2017-ம் ஆண்டில் நிறுவப்பட்ட வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், வியட்நாமின் ஹாய் ஃபோங்க் (Hal Phong) என்ற இடத்தில் 90 சதவீதம் வரை தானியங்கி (ஆட்டோமேஷன்) செயல்முறை கொண்ட, உலகளாவிய முன்னணி அதிநவீன வாகன உற்பத்தி வளாகத்தைக் கொண்டுள்ளது

அனைவருக்கும் நிலையான எதிர்காலம் என்ற பணியில் உறுதியாகச் செயல்படும் வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், உயர்தர தயாரிப்புகள், மேம்பட்ட நவீன (ஸ்மார்ட்) சேவைகள், தடையற்ற வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றைக் வழங்குவதற்குத் தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகிறது. அத்துடன் அனைவரையும் கவர்வதற்கு ஏற்றவகையில் விலைக் கொள்கையையும் இது கடைப்பிடிக்கிறது உலகளாவிய வாடிக்கையாளர்கள் ஒரு நிலையான சுற்றுச்சூழல் கொண்ட பூமியை உருவாக்குவதற்காக நவீன (ஸ்மார்ட்) பசுமைப் போக்குவரத்து எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க இந்நிறுவனம் ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளது.

நிகழ்வைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாவில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். 


செய்தியாளர்: அஹமத் ஜான்

புகைப்படம் : சித்திக்

Previous Post Next Post