சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டி.. 11 பதக்கங்கள் குவித்து அசத்திய கோவை மாணவர்கள்*
டில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
வாக்கோ இந்தியா சார்பில் 3வது சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டில்லியில் அண்மையில் நடைபெற்றது..இதில் துருக்கி,ரஷ்யா,மலேசியாஇந்தியா,என 19 நாடுகளில் இருந்து,ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பாக கோவையில் இருந்து ஆண்ட்லி ப்ளோக் பெல்ட் அகாடமி,மற்றும் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமியில் பயிற்சி பெற்று வரும்,மன்சர்,தாரகேஸ்வரன்,சஞ்சய்,அபிஷேக்,சிங்கதமிழன்,யஹாயா என ஆறு மாணவர்களும்,அஷ்விதா என்ற ஒரு மாணவி உட்பட ஏழு பேர் கலந்து கொண்டனர்..இதில் பாய்ண்ட் ஃபைட்,லைட் காண்டாக்ட்,கிக் லைட் மற்றும் ரிங் ஸ்போர்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்ட ஏழு பேரும் இரண்டு தங்கம்,நான்கு வெள்ளி,ஐந்து வெண்கலம் என 11 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.தமிழகத்தில் முதன் முறையாக இளம் நடுவராக ரிங் ஸ்போர்ட்ஸ் பிரிவில் கோவையை சேர்ந்த மிதுன் என்பவரும் பங்கு பெற்றுள்ளார். இந்நிலையில் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு இரயில் நிலையத்தில், பயிற்சியாளர் ஆண்ட்லி ப்ளோக் பெல்ட் அகாடமியின் நிறுவனர்ங ஆனந்த் குமார் மற்றும் கோவை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் பொது செயலாளரும் குணியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமியின் நிறுவனரும் ஆன பிரேம் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது...இதில் மாணவ,மாணவிகளுக்கு மாலை அணிவித்தும்,பூச்செண்டுகள் வழங்கயும்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.. இந்தியா சார்பாக கலந்து கொண்டு நாட்டிற்கும்,தமிழகத்திற்கும், பெருமை சேர்த்துள்ள கோவை கிக் பாக்சிங் வீரா்களை பலரும் பாராட்டி வருகின்றனர்..