நீலகிரி ஸ்ரீ சாயி மாருதி சேவாஅறக்கட்டளை, கோயம்புத்தூர் ஸ்ரீ சாயி ஸாக்ஷாத்காரம் அறக்கட்டளை, மற்றும் நாக சாயி அறக்கட்டளை ஆகியோர் இணைந்து 100 கோடி ராம நாம லிகித ஜப விழா வெகு விமரிசையாக நடைபெற்றது…
நீலகிரி ஸ்ரீ சாயி மாருதி சேவாஅறக்கட்டளை, கோயம்புத்தூர் ஸ்ரீ சாயி ஸாக்ஷாத்காரம் அறக்கட்டளை, மற்றும் நாக சாயி அறக்கட்டளை ஆகியோர் இணைந்து பல்வேறு இறைபணிகளையும் சேவைப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்..குறிப்பாக,அன்னம், அக்ஷரம் மற்றும் ஆரோக்கியம் என நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 1000்க்கும் மேற்பட்ட
மக்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி மதிய உணவும் வழங்கப்படுகிறது.மேலும் ஆரோக்கியமான தாய், ஆனந்தமான குழந்தை திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது..இந்நிலையில் கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள நாகசாயி மந்திர் வளாகத்தில், 100 கோடி ராம நாம லிகித ஜப விழா வெகு சிறப்பாக நடைபெற்றது..இந்நிகழ்ச்சியில்,சச்சிதானந்த குரு ஸ்ரீ நவீன் சாயி , யசோதா அம்மா,சாயி மாருதி சேவா அறக்கட்டளை தலைமை அறங்காவலர் மேகநாதன், பால சுப்பிரமணியம், ஸ்ரீ நாக சாயி அறக்கட்டளை தலைமை அறங்காவலர், பால சுப்பிரமணியம், செயலாளர்,பாலசுப்ரமணியம், சுகுமார்,பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் புவனேஷ்வரன், டாக்டர் ராவ்,நடராஜன், டாக்டர் பி.எஸ். ராஜன், வித்யா ராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்…