தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் கோயம்புத்தூர் ஏரோஸ்கேட்டோபால் அசோசியேஷனை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கபதக்கம் மற்றும் வெண்கலம் பதக்கங்களை வென்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
தமிழகத்தில் 9வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டி அண்மையில் திருச்சியில் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு ராஜஸ்தான் மகாராஷ்டிரா, கேரளா,பாண்டிச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கலந்து கொண்டன.
ஆண்கள்,பெண்கள் என மொத்தம் ஆறு பிரிவுகளில் நடைபெற்ற ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடிய கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 34பேர் தங்க பதக்கங்களும், 2 பேர் வெண்கல பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில் தமிழக ஸ்கேட்டிங் அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,கோயம்புத்தூர் ஏரோஸ்கேட்டோபால் அசோசியேஷனர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து மதுக்கரை பகுதியில் உள்ள மல்லையன் மெட்ரிக் பள்ளியில் அறங்காவலர் கிரித்திகா ஜெயகுமார்,கோயம்புத்தூர் ஏரோஸ்கேட்டோபால் அசோசியேஷனர் செயலாளர் அபுதாஹீர்,தலைமை ஆசிரியர் ரேகா மணிகண்டன், ஆகியோர் தலைமையில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.