சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர் நியமனம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைப்பின் கிளைகளை நிறுவி சமூக சேவை செய்து வருகிறது. அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவை செய்து வரும் சேவை செம்மல் ரவி ஜான் அவர்களை சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பி.ஆர்.ஓ. டாக்டர் T.G. மனோகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் A. சுரேஷ்குமார் அவர்கள் புதுச்சேரி மாநில தலைவராக சேவை செம்மல் ரவி ஜான் அவர்களை நியமனம் செய்து புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பாக சமுதாய சேவையாற்ற வாழ்த்துக்கள் தெரிவித்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு நல்கி சேர்ந்து சமூக சேவை பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளார்.