மக்கள் மனதில் மிளிரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!*

  மக்கள் மனதில் மிளிரும் மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி!சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!* 

 என்ன தவம் செய்தோம் இப்படிப்பட்ட மாவட்ட ஆட்சியரை நாங்கள்  பெற்றதற்கு என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அவர்களை தற்பொழுது மயிலாடுதுறை  மக்கள் பெரிதும் புகழ்ந்து  பாராட்டி வருகிறார்கள் என்றால் மிகையாகாது. குறிப்பாக அவர் பொறுப்பேற்றது முதல் நேரடியாக மக்களை சந்தித்து குறைகளை தீர்த்து வருவதோடு கூட, பொது இடங்களில் குறிப்பாக பள்ளிகளில் அவருடைய அறிவுரைகள் மாணவர்களை ஊக்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல்  பெற்றோர்களையும் பெருமகிழ்ச்சியும் நிம்மதியும் அடைய செய்துள்ளது. மிளிரும் பள்ளிகள் என்னும் தலைப்பில் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி  மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, திடீரென்று  மாணவர்களிடம், அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் வாயிலாகவே கேள்விகள் கேட்டு அவர்களின் அறிவுத்திறனை பரிசோதித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் அறிவுரையாக, மாணவர்கள்  நன்றாக படிக்க வேண்டும், தினமும்  திரும்பத் திரும்ப படிக்க வேண்டும், படித்ததை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும் என்று தனது வாழ்வில் அவருடைய ஆசிரியர்கள் கூறியதையே பழக்க வழக்கமாக்கி பின்பற்றி  கொண்ட காரணத்தினால் தான் உயர்நிலைக்கு வந்ததாகவும், மேலும் முதல் நிலை மாணவர்கள் என்பவர்கள் இப்படிப்பட்ட தொடர் முயற்சிகள் மேற்கொண்டதால்தான் வந்துள்ளார்கள் என்றும், உயர் நிலைக்கு வந்தவர்கள் அத்தனை பேருமே நிறைய படித்தவர்களாக தான் இருக்கிறார்கள் என்றும், ஒரு சிலர் மட்டுமே படிக்காமல் மேதையாகி உள்ளார்கள் என்றும் ஆகவே ஒவ்வொருவருக்கும்  படிப்பு மிகமிக அவசியம் என்பதையும் எதார்த்தமாக எடுத்துக்  கூறி  பேசியது மாணவர்கள் மனதில் பசு மரத்தாணியைப் போல அறிவின் ஆழத்தை பதித்து இருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. இப்படிப்பட்ட உயர் நிலையில் இருப்பவர்கள், மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியர் மகாபாரதி போல செயல்பட்டால் மிளிரும் பள்ளிகள் அல்ல மிளிரும் நாடு என்பது உறுதியாக உருவாகும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை நாமும் வாழ்த்துவோம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
Previous Post Next Post