சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரக வனப்பகுதியில், புலி, சிறுத்தை, யானை, கரடி, மான்,காட்டெ ருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வன ப் பகுதியை விட்டு வெளியேறி குடியி ருப்பு பகுதிகளில் நடமாடுவது வழக் கம்..இந்த நிலையில், சனிக்கிழமை அன்று,பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாள பாளையம் பிரிவு சாலை யில், நள்ளிரவில்,விளாமுண்டி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி நடமாடி உள்ளது. கிராமத்தில் புகுந்து வந்து, சாலையில் கரடி நட மாடிய காட்சி,அப்பகுதியில் பொருத்த ப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதி வாகியுள்ளது.இந்த வீடியோ தற்போது ,சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
கரடி நடமாட்டம் காரணமாக, பவானி சாகர். வெள்ளாள பாளையம் கிராம பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.