கோவையில் இந்திய நாட்டின் கலாச்சாரத்தை போற்றும் விதமாக என்.ஐ.ஈவெண்ட்ஸ் சார்பாக நடைபெற்ற நம்ம ஊரு தாறுமாறு எனும் ஆடை அலங்கார அணி வகுப்பு

கோவையில் இந்திய நாட்டின்   கலாச்சாரத்தை போற்றும் விதமாக என்.ஐ.ஈவெண்ட்ஸ் சார்பாக நடைபெற்ற நம்ம ஊரு தாறுமாறு எனும் ஆடை அலங்கார அணி வகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது…
கோவையில் உள்ள என்.ஐ.ஈவெண்ட்ஸ் சார்பாக நம்ம ஊரு தாறுமாறு எனும் தலைப்பில் ஓவியம் மற்றும் ஆடை அலங கார அணிவகுப்பு கண்காட்சி கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள டயமண்ட் ஓட்டல் வளாகத்தில் நடைபெற்றது.என்.ஐ.ஈவெண்ட்ஸ் நிறுவனர் ராஜா தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினர்களாக பிரபல தொகுப்பாளர் முத்துக்குமரன் மற்றும் பேஷன் ஆர்ட்  நிறுவனத்தின் நிறுவனர் சுகுணா சண்முகம்,
பிரபல ஆடை வடிவமைப்பாலர் அபு , ஆகியோர் கலந்து கொண்டனர்..இந்திய மற்றும் தமிழ் கலாச்சார முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இதில்,வில்லேஜ் எனும் தலைப்பில் கிராமங்களின் முக்கியத்துவம் குறித்த ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு கிராமங்களின் அவசியம் குறித்து ஓவியம் வரைந்து அசத்தினர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது.இதில் இந்தியாவின் பன்முகத்தன்மையை கூறும் விதமாக பல்வேறு மாநிலங்களின் கலாச்சார ஆடை அணிந்த மாடல்கள் மேடையில் அணி வகுப்பு நடத்தினர்.ஒரே மேடையில் இந்திய நாட்டின் பல்வேறு மாநில கலாச்சார உடை அணிந்து நடைபெற்ற இந்த அணி வகுப்பு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது..
Previous Post Next Post