திராவிட முன்னேற்ற கழகம், சத்திய மங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றா ண்டு நினைவாக, குத்தியாலத்தூர் ஊராட்சி கடம்பூரில், திமுக சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர், ஐ.ஏ. தேவராஜ் தலைமையில், நடைபெற் றது கிரிக்கெட் போட்டியை,திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.நல்லசிவம் போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணியின ருக்கு, பரிசுத் தொகை மற்றும் கோப் பைகள் வழங்கி வாழ்த்தினார். இந் நிகழ்ச்சியில், கே.என் பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் கே.ரவிச சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் சதுமுகை ஆறுச்சாமி, தாசரிபாளை யம் ரமேஷ்.கே.என் பாளையம் பேரூர் கழக துணைச் செயலாளர் ரஜினி தம்பி, மற்றும் ஒன்றிய,பேரூர்,கழக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், திமுக கட்சியினர், பொதுமக்கள், கிரிககெட் வீர்ர்கள், ரசி கர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக, இறுதி போட்டியில் பங் கேற்ற அணியின் வீரர்களுக்கு. திமுக மாவட்டச் செயலாளர் நல்லசிவம் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.