தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் ஒரு நாள் பயிற்சி பட்டறை தலைவர் பொன் குமார் தலைமையில் கோவையில் நடைபெற்றது

அமைப்பு சாரா தொழிற்சங்க கோவை மண்டலம் சார்பாக தொழிற்சங்க நிர்வாகிக்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் தலைமையில்  கோவையில் நடைபெற்றது.
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கோவை மண்டலம்   சார்பாக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள ஆர்.ஜே.மகால் அரங்கில் நடைபெற்றது.கோவை மண்டல தலைவர் ஜி.முகம்மது ரபீக் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,கோவை,ஈரோடு,திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, செய்யும் தொழில், பணி அடிப்படையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உடலுழைப்புத் தொழிலாளர்கள்,எலக்ட்ரிகல், ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள், தையல், கைவினைஞர்,, ஓவியர், , கைத்தறி நெசவாளர், விசைத்தறி,, சமையல், சாலையோர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள் என  பல்வேறு  அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மற்றும்  தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்..இந்த பயிற்சி பட்டறையில் தொழிற்சங்கங்களின் சட்டங்கள்,தொழிற்சங்கமும் பெண்களும், நலவாரியம்,மனித உரிமைகள் அது தொடர்பான சட்டங்கள்,கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்ந்த தொழிலாளர்கள்,தலைமை பண்பு என தொழிற்சங்க அமைப்புகள் சார்ந்த வழிமுறைகள் , தகவல்கள் குறித்த பயிலரங்குகள் நடைபெற்றன.இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு தொழிற்சங்க நிர்வாகிகளிடையே கலந்துரையாடினார்..அப்போது பேசிய அவர்,தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய மாநில அரசுகளின் சட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் எனவும்,குறிப்பாக அரசு வழங்கும் வழங்கும் உதவி தொகைகள்,மருத்துவம், கல்வி,உள்ளிட்ட துறை சார்ந்த நிதி உதவிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்..
இந்நிகழ்ச்சியில், பால கிருஷ்ணன்,குருநாகலிங்கம்,இராம வெங்கடேசன்,வழக்கறிஞர் சதீஷ் சங்கர்,ஜெக முருகன்,உமா மகேஸ்வரி,ஆறுமுகம்,முருகேசன்,ராஜதுரை,அழகு,கம்பம் ராஜன்,கரடி,களஞ்சியம்,சுப்ரமணி,மனோகரன்,சக்திவேல் உட்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
Previous Post Next Post