போக்குவரத்து கழகங்களில், காலி யாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான,வித்தியாசத் தொகை யை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண் டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங் கள்நிரப்பவேண்டும்என்பனஉள்ளிட்ட 6 அம்சகோரிக்கைகளை,வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்களின் தொழி ற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித் திருந்தனர்.
இதனையடுத்து,போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை யில், சென்னையில் நடைபெற்ற பேச் சுவார்த்தை தோல்வியுற்றதை அடுத் து,நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் துவங்கியது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அரசு போக்குவரத்து கிளை யில், 82 பேருந்துகள் இயக்கப் படுவ தாகவும், அதில் இன்று அதி காலை 6.45 மணி வரை சுமார் 62 பேருந்துகள் (நகர பேருந்துகள் உட் பட) இயக்கப் பட்டன. மேலும் காலை 8 மணி நிலவர ப்படி 95% சதவீத பேருந்துகள் இயக்க ப் பட்டன. கர்நாடக மாநில பேருந்து களும், சத்தியமங்கலம் வழியாக வழக்கம்போல் இயக்க படுகின்றன.
போக்குவரத்துஊழியர்களின்வேலை நிறுத்தம் காரணமாக, பணிமனை யில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள னர்.அதேபோல்,சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையத்திலும்,சத்திய மங் கலம் காவல்துறையினர் மற்றும் ஆயு தப் படை காவலர்கள்,காவலர் பயிற்சி பள்ளி காவலர்கள் பாதுகாப்பு பணி யில்.ஈடுபட்டுள்ளனர்.போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக, அனைத்து தொழிற்சங்கங் களின் சார்பில்,நேற்று இரவு எட்டு மணி அளவிலும், இன்று அதிகாலை 5 மணி அளவிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.