தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர்.விஜயகுமார் கண்டன அறிக்கை
தமிழக அரசு உடனடியாக தமிழருக்கு அதிகம உரிமை உள்ள ராமருக்கு சிறப்பு பூஜை நடத்தவுள்ள தடையை நீக்ககோரிக்கை..
இந்தியா முழுவதும் இந்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தியில் நாளை 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா சீரும் சிறப்பாக நடைபெறும் உள்ளது அந்தவேளையில் நாடு முழுவதும் பெரும்பான்மையான மாநிலங்களில் விடுமுறையும் தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் கோயில்களில் சிறப்பு பூஜையும் அன்னதானம் நடைபெறுகிறது அதே நேரம் தமிழகத்தில் சிறப்பு பூஜையும் அன்னதானம் நடத்த தமிழக திமுக அரசு அறநிலைத்துறை மூலம் தடை விதித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் ராமாயணம்நிகழ்வுகள் பெரும்பகுதி தமிழகத்தில் தான் நடந்துள்ளது ராமர் சீதையைமீட்பதற்குஆதரவான போர் ராவணனை கொன்ற பிறகு அவருக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தியாவதற்கு நமது ராமேஸ்வரத்தில் ஒரு சிவனை உருவாக்கி ராமர் தனது தோஷத்தை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொண்டார் . அந்த ராமேஸ்வர கோயில் அனைத்து மக்களும் வழிபாடு செய்து கொண்டாடி வருகிறார்கள் அனைத்து தமிழக கோவில்களிலும் தலைவர்கள்பிறந்த நாளுக்கு அன்னதானம் வழங்க அனுமதி உள்ளது அதேபோல் கடவுள் மறுப்பு கொள்கைதலைவருக்கு பிறந்த நாள்விழா ஆன்மீக கோவில்களில் சமபந்தி விருந்து விழாவாக நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெரும்பான்மையான ராமாயணம் நிகழ்வுகள் நடந்துள்ள போதும் அதற்குண்டான; சிறப்பு நிகழ்ச்சிகளும் போஸ்டர்களும் வைக்க கூடாது என்று தடை செய்திருப்பது திமுகவின் இந்து விரோத செயல் தற்போது பகிரங்கமாக வெட்ட வெளிச்சமாகியுள்ளதுகடும்கண்டணத்துக்குரியது. தாங்கள் அனைத்து மதத்திற்கும் சாமானவர்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்று உதட்டளவில் தான் பேசுகிறார்கள் என்பது தெளிவாகிறது. ராமர் தமிழக மக்களுக்குத்தான் அதிகமாக உரிமை உள்ளது அவரது போர் வெற்றிக்கு வாழ்க்கைக்கும் தமிழகத்தைசார்ந்தவர்கள் உதவியுள்ளனர். தமிழக மக்களுக்கு முழு உரிமை உள்ள ராமருக்கு அனைத்துஇந்து கோவில்களுக் உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு பூஜைக்கான தடையை நீக்கி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜையும் அன்னதானம் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பாக தமிழக திமுக அரசை கேட்டுக்கொள்கிறோம்.