நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்காவில் கடந்த சில மாதங்களாக கரடி சிறுத்தை போன்ற வனவிலங்குகளால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏலம் மன்னா பகுதியில் சிறுத்தை தாக்கியதில் மூன்று பேர் காயம் அடைந்தனர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர் அதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர் அதன் பின்பு இதுவரைக்கும் சிறுத்தையை பிடிக்கவில்லை இந்நிலையில் கொலப்பள்ளி சேரன் கோடு அரசு தேயிலை தோட்டம் சேவியர் மட்டம் பகுதியை சேர்ந்த வசந்த ராஜ் என்பவரின் நான்கு வயது குழந்தையை இன்று சிறுத்தை தாக்கியது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து சிறுத்தையிடம் இருந்து குழந்தையை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் இது தொடர் கதையாக இருப்பதால் தமிழக அரசும் வனத்துறையும் உடனடியாக கூண்டு வைத்து ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது