"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் முகாம் - பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார் அமைச்சர் கீதா ஜீவன்.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்
"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின்கீழ் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளி பயனாளிக்கு அங்கீகார சான்றிதழை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆர்த்தி மஹாலில் இன்று (11.01.2023) அரசுத்துறைகளின் சேவைகள் பொதுமக்களுக்கு இன்னும் எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய வேண்டுமென்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின்கீழ் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளி பயனாளிக்கு அங்கீகார சான்றிதழை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, கோவில்பட்டி வட்டத்தில் மழை வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்த 11 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1,10,000 நிவாரணத் தொகைகளையும், கால்நடைகளை இழந்த 2 நபர்களுக்கு ரூ.48000 நிவாரணத் தொகைகளையும் வழங்கினார்கள்.
இம்முகாமில், கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கா.கருணாநிதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், கோவில்பட்டி ஆணையாளர் கமலா, கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.