பொள்ளாச்சி கொண்டேகவுண்டன்பாளையம் கிராமத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக வரப்பெற்ற புகார் செய்தியின் பேரில் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கொண்டேகவுண்டன்பாளையம் கிராமத்திலுள்ள மயானமானது சமத்துவ மயானமாக கடந்த 2022- ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, கிராம ஊராட்சி விருது வழங்கப்பட்டுள்ளது. மேற்படி பொது மயானமானது சாதி சமய வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் பயன்படுத்தும் வகையில் சமத்துவ மயானமாகவே உள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எனத் தனி மயானம் ஏதும் மேற்படி ஊராட்சியில் இல்லை. இந்நிலையில் தினசரி பத்திரிக்கையில் கொண்டேகவுண்டன்பாளையம் கிராமத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக வரப்பெற்ற புகார் செய்தியின்பேரில் 31-12-2023-ஆம் தேதியன்று சார் ஆட்சியர், பொள்ளாச்சி மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர், பொள்ளாச்சி ஆகியோரால் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல் துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டாக ஆய்வு செய்யப்பட்டதில், கொண்டேகவுண்டன்பாளையம் கிராமத்தில் உள்ள அனைத்து சமூக இன மக்களும் சாதி, சமூதாய, இன வேறுபாடின்றி பொதுவான மயானத்தில் இறந்தவர்களின் பூத உடலினை அடக்கம் செய்து வருகின்றனர் என்பதும், இங்கு எவ்வித சாதி சமய பூசல்கள் இல்லாமல் பொதுமக்கள் சமத்துவத்தை கடைபிடித்து வருகின்றனர் என்பது தெரியவருகிறது.
இது குறித்து பலதரப்பட்ட சமூகத்தை சார்ந்த கிராம பொதுமக்களை ஒருங்கிணைத்து விசாரணை செய்யப்பட்டதில் கிராமத்தில் ஒரே மயானம் தான் உள்ளது எனவும், அனைத்து சாதியைச் சேர்ந்த மக்களின் இறந்த பூத உடல்கள் மேற்கண்ட ஒரே மயானத்தில் தான் இதுநாள் வரை அடக்கம் செய்யப்பட்டு வருவதாகவும், மயானத்தில் தீண்டாமை எதுவும் கடைபிடிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேற்படி கிராமத்திலுள்ள மக்களுடனான கலந்துரையாடலில் சமத்துவ மயானத்தில் தீண்டாமை கடைப்பிடிப்பதாக புகார்கள் ஏதும் பெறப்படும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Previous Post Next Post