மயிலாடுதுறையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசிதழில் வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு திமு கழக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் நன்றி!*

*மயிலாடுதுறையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசிதழில் வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு திமு கழக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் நன்றி!*  சோழமண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் எத்தனையோ மகத்துவங்களை பெற்றிருக்கிறது. அரசியல், ஆன்மீகம், கல்வி, வரலாற்று முக்கியத்துவம் இப்படி எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தில் தனித்து அடையாளப்படுத்தப்படும்.இவை எல்லாவற்றிலும் கூடுதல் சிறப்பு இதன் மாறாத பசுமை. நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடி செழிப்போடு விளங்க செய்திடும் காவிரி, இங்குதான் கலைஞரால் மதிப்பு கூட்டப்பட்ட பூம்புகாரில் (காவிரிபுகும்பட்டினத்தில்) மகிழ்வோடு வங்கக்கடலில் சங்கமிக்கிறது.
இது நிலைக்கப்பட வேண்டுமேயானால், இம்மாவட்டம் *பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்* என்று அரசுதழில் வெளியிடப்பட வேண்டும். அதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் உறுதிப்படுத்தும் விதமாக சென்ற கூட்டத் தொடரில் மசோதாவை நிறைவேற்றினார். இன்று தமிழக அரசின்   அரசு இதழில்  அந்த அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இதை தமிழக அரசின் சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் அவர்கள் அதற்கான தமிழக ஆளுநர் ஒப்புதலை பெற்று அந்த நல்ல அறிவிப்பை அறிவித்துள்ளார். தமிழக விவசாயிகள் மீதும் விவசாய தொழிலாளர்கள் மீதும் அதிக அக்கறை கொண்டுள்ள இத் திராவிட மாடல்  அரசின் மாண்புமிகு முதல்வர், மயிலாடுதுறை மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார்.
விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.  தன்னுடைய விளைநிலங்கள் எதிர்காலத்தில் எந்த பாதிப்புகளுக்கும் உள்ளாகாமல் பாதுகாக்கப்படும் என்று நம்பிக்கையோடு உள்ளார்கள்.
இது மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு மதிப்புமிக்க முதல்வர் தந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக கருதுகின்றோம்..மகிழ்வோடு வரவேற்கின்றோம்..
என்றென்றும் இப்பகுதி விவசாயிகள் மாண்புமிகு முதல்வருக்கு நன்றியோடு இருப்பார்கள், என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில விவசாய தொழிலாளர்கள் அணி இணை  செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்   ஜெகவீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post