கோவை விநாயகா சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அன்பு இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி

கோவை விநாயகா சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அன்பு இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது…

கோவையில் செயல்பட்டு வரும் விநாயகா சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக கல்வி உதவி தொகை,ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கொரோனா கால கட்டங்களில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தொடர்ந்து உணவு அளித்தது என தொடர்ந்து பல்வேறு சமூக சார்ந்த சேவை பணிகளை செய்து வருகின்றனர்.அதே போல பண்டிகை நாட்களில் ஆதரவற்ற இல்லங்களுக்கு புத்தாடைகள் இனிப்பு வழங்குவதையும் வழக்கமாக செய்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக   பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை புதூர் போஸ்டல் காலனி பகுதியில் உள்ள அன்பு இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.விநாயகா சேரிட்டபிள் டிரஸ்டின் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகி நிவேதா ஆகியோர் ஒருங்கிணைப்பில்  நடைபெற்ற இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க.இளைஞரணி நிர்வாகியும்,சமூக சேவகரும் ஆன  சிங்கை மதன்,மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் கோவை சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் கண்ணன்,அறக்கட்டளை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Previous Post Next Post