ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம். ம. கொமராபாளையம் கிராமம்,ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 4 ஆம் ஆண்டு, தமிழர் திருநாள் பொங்கல் விளை யாட்டு விழா சிறப்புடன் துவங்கியது. முதல் நாளான நேற்று பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கி, கிராம புற விளையாட்டு போட்டிகள் மற்றும் கோலப் போட்டி நடைபெற்றது.
மாலையில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில், கொமார பாளை யம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். எம். சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றி னார் னார்.நிகழ்ச்சியில், ஊர் கமிட்டி நிர் வாகி நாகமாணிக்கம், ஊராட்சி கிராம வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு (எ) முனுசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.வடிவேலு,வசந்தி, கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, உரியடித்தல் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. பொங்கல் விழா நிகழ் ச்சியில். ஊரே திரண்டு பங்கேற்ற தால்,களை கட்டிய பொங்கல் விழா வில், இளைஞர்கள், பெண்கள் இசை க்கேற்ப, மகிழ்ச்சியுடன் ஆடி, பாடி மகிழ்நதனர். நிறைவாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, வினோத் சேது ஹரி ஹரன், செல்வராஜ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் செய்திருந்த னர்.