*இந்தியாவின் தனித்துவமிக்க நகை கண்காட்சியான ஆசியா நகை கண்காட்சி கோவை தாஜ் விவாந்தா ஒட்டலில் துவங்கியது*
ஜனவரி 19 ந்தேதி துவங்கி 21 வரை நடைபெற உள்ள இதில், மும்பை,பெங்களுரு, டில்லி, சென்னை மற்றும் கோவையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் சொகுசான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நகை பிரியர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த ஆசிய நகை கண்காட்சி 2024 கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் விவான்டா ஹோட்டலில் துவங்கியது.. ஜனவரி 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில், கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனரும் செயலாளருமான முனைவர் சி. எ. வாசுகி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக நேரு கல்வி குழுமத்தின் இயக்குனர் (மக்கள் தொடர்பு) டாக்டர் அ. முரளிதரன் கலந்து கொண்டார்..
திருமணம் மற்றும் விழாக்கால விற்பனை நகை காண்காட்சியாக நடைபெறும் இதில்,. இந்தியாவின் மிகச்சிறந்த வடிவமைப்புகள், பிராண்டுகள் ஒரே கூரையின் கீழ் வாங்கலாம்,.
அகில இந்திய அளவில் முன்னணி, கைவினை கலைஞர்கள் உருவாக்கிய நகைகள், உயர்தர நுண்கலை, பிராண்ட் தங்கம் மற்றும் வரை நகைகளுக்கு முக்கியத்துவம் பெற்றது. தற்போதுள்ள நுண்கலை தங்க நகைகள், வைர நகைகள், பிளாட்டினம் நகைகள், பாரம்பரிய நகைகள், திருமண நகைகள், அரிதான கல் நகைகள், குந்தன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளன.
சர்வதேச தரம் வாய்ந்த நகைகளை தென்னிந்திய அளவில் இந்த கண்காட்சி இடம் பெறச் செய்துள்ளது.
மும்பை,பெங்களுரு, டில்லி, சென்னை மற்றும் கோவையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் சொகுசான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அகில இந்திய அளவிலான இந்த கண்காட்சியில், மெங்களூரு வராஸ்ரீ ஜூவல்லர்ஸ் ,டில்லி சீகல் ஜூவல்லர்ஸ் மும்பையை சேர்ந்த நாகா கிரியேஷன்ஸ் , இபான் ஹவுஸ் சிரியான் ஜூவல்ஸ்,ஜிவா ஜூவல்லரி , யுப் ஜூவல்லரி ,சென்னை என்.ஏ.சி ஜூவல்ஸ் ஜெய்ப்பூர் எப்.இசட் ஜெம்ஸ் பி.இ.எம் டயமன்ஸ் அடுல் ஜூவல்லரி மற்றும் பல நகரங்களை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன..
ஆசியாவின் மாபெரும் தங்க வைர கண்காட்சியான ஆசியன் ஜூவல்ஸ் ஷோ 2024 பற்றி அறிய 9620461919, இமெயில் info@hrsmedia.in தொடர்பு கொள்ளலாம். https://hrsmedia.in என்ற இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.