மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு. க .ஸ்டாலின் அவர்கள் சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 100 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் ஈரோடு பேருந்து நிலையத்தில் மூன்று பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி அவர்கள் ,ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி .வெங்கடாசலம் அவர்கள், ஈரோடு மாநகராட்சி மேயர் மாண்புமிகு திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள், துணை மேயர் V.செல்வராஜ் அவர்கள்,
போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ,மாமன்ற உறுப்பினர்கள் மண்டல குழு தலைவர்கள் ,மற்றும் கழக மாநில,மாவட்ட, மாநகர, பகுதிகழக, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர் இடம் :ஈரோடு பேருந்து நிலையம்.