கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் இந்து, இஸ்லாமிய,கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக  பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் இந்து, இஸ்லாமிய கிறிஸ்தவர்கள்,மற்றும் சீக்கியர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ பொங்கல் கொண்டாடி,நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் தொடர்ந்து பதினைந்தாவது ஆண்டாக   கோவை பேரூர் ஆதின வளாகத்தில் இந்து,இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்த சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கோவையை சேர்ந்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி,மாநில உயர் மட்ட ஆலோசணை குழு உறுப்பினர் புவனேஸ்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர..நிகழ்ச்சியில்  பேரூராதீனம் தவத்திரு  மருதாசல அடிகளாருடன் இணைந்து அப்துல் ரஹீம் இம்தாதி,ஜார்ஜ் தனசேகர்,குர்பிரீத் சிங்,இக்பால் சிங்,முகம்மது அயூப் பாகவி,முகம்மது அலி உட்பட  கிறிஸ்தவ,சீக்கிய  மற்றும் இஸ்லாமிய மத போதகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேரூர் தமிழ்கல்லூரியில் பொங்கல் பானை வைத்து அனைத்து மத தலைவர்களும் பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக வாழ்த்தினர்..பின்னர் நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில்,கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அனைவரும் கலந்து கொண்டனர்..
தொடர்ந்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகை,ஏழை பெண்களுக்கு தையல் இயந்தி்ரம்,நலிவுற்ற குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து செயல்படுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் நகர திட்ட அலுவலர் ரவிச்சந்திரன்,பேராசிரியர் சூரிய நாராயணன்,மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ஜெயச்சந்திரன்,மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஏ.பஷீர்,சுப்ரமணியன்,ரவிகாந்திபூபேஷ்,அன்வர் பாட்சா,சீனாவாசன்,பத்மநாபன் முகமதுஅலி கோவைபஷீர்,அபுதாகீர்,உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய நாட்டின்  ஒற்றுமையை பறை சாற்றும் விதமாக மதங்களை கடந்து அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..
Previous Post Next Post