ஆரோக்கியமான கோவை என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பங்கேற்பு

கோயம்புத்தூர்  விழா -2024
ஆரோக்கியமான கோவை என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் 

5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து பங்கேற்றனர்
கோயம்புத்தூர்  விழா கடந்த 2ம் தேதி தொடங்கி நாளையுடன்  முடிவடைகிறது. இதுவரை நடைபெற்ற கோவை விழாவில் பல்வேறு போட்டிகள், பல்வேறு  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

இன்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுகிறது . கோவையில் வருடம் முழுவதும் பல்வேறு மாரத்தான் போட்டிகள் நடைபெறும் , அனால் கோயம்பத்தூரின் 2024 ஆம் ஆண்டு நடை பெறும் முதல் மாரத்தான் போட்டி இதுவாகும். அதன் ஒரு பகுதியாக நேரு விளையாட்டு அரங்கம் அருகில் கோயம்பத்தூர் விழா மாரத்தான் போட்டி நடைபெற்றது.  ஆரோக்கியமான கோவை என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி  ஐந்து வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

இந்த மாரத்தான் போட்டி 2.5 கிமீ, 5கிமீ, 10கிமீ என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. 

இதில் பத்து கிலோமீட்டர் பிரிவில் கோவை மாவட்ட ஆட்சியர்  திரு.கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உட்பட காவல்துறையினர், பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர். 

மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  மாரத்தான் போட்டிகள் பங்கேற்ற பலரும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
Previous Post Next Post