கோவை வெள்ளலூர் பகுதியில் மாலை நேர இலவச பாடசாலையை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் துவக்கி வைத்தார்

கோவை வெள்ளலூர் பகுதியில் மாணவ,மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக துவங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர்  மாலை நேர இலவச பாடசாலையை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் துவக்கி வைத்தார்..
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள வள்ளலார் காலனியில் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வியை  ஊக்குவிக்கும் விதமாக டாக்டர் அம்பேத்கர் மாலை நேர பாட சாலை துவங்கப்பட்டது..ராவ் சாகிப் எல்சி குருசாமி கல்வி மையம்,மற்றும் நீலம் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகள் சார்பாக துவங்கப்பட்ட இதற்கான துவக்க விழா,வழக்கறிஞர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.இதில்,வெள்ளலூர் 6 வது வார்டு கவுன்சிலர் பெருமாள்,எல்சி  குருசாமி கல்வி மையத்தின் சந்துரு,மற்றும் துணை வட்டாட்சியர் கருணாநிதி,அருந்தமிழ் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் பால்ராஜ்,ஆசிரியர் சக்திவேல்,ஆகியோர் முன்னிலை வகித்து கல்வியின் முக்கியத்துவம் அதில் டாக்டர் அம்பேத்கரின் செயல்பாடு அவரின் தியாகங்கள் குறித்து பேசினர்.. .விழாவில் சிறப்பு விருந்தினராக,பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரும் சமூக சேவகரும் ஆன முகம்மது ரபீக் கலந்து கொண்டு மாலை நேர பாட சாலையை துவக்கி வைத்தார்.தொடர்ந்து பேசிய அவர்,இந்திய நாட்டின் ஜனநாயகம் உலக அளவில் பேசப்படுவதற்கு,டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய  அரசியலைப்பு சட்டமே என சுட்டி காட்டினார்..தொடர்ந்து பேசிய அவர்,இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் அண்ணல் காந்தி,மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என  கேட்டு கொண்டார்..குறிப்பாக கல்வி கற்பதன் அவசியம் குறித்து பேசிய அவர்,கல்வியோடு ஒழுக்கத்தையும் மாணவ,மாணவிகள் கற்று கொள்ள வேண்டும் எனவும்,இதற்கு ஆசிரியர்கள்,பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம் என குறிப்பிட்டார்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியி்ல்,இலவச பாடசாலையில் பயின்று முன்னேறி அரசு அலுவலர்களாக பணியாற்றும் அரசு ஊழியர்கள் நாகராஜ்,பாலசுந்தரி,சூர்யா பிரபா சந்திரசேகரன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்..இதே போல   குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..
Previous Post Next Post