தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வட்ட அளவில் நடத்தப்பட வேண்டும்.
இதனை முன்னிட்டு 02.02.2024 அன்று காலை 9 மணி முதல் 03.02.2024 காலை 9 மணி வரை மேட்டுப்பாளையம் வட்டத்திலேயே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் தங்கியிருந்து அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும் ஆய்வின் போது சந்திக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்தும், அரசின் நலத்திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்கிறார்கள். இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை உரிய அலுவலர்களிடம் நேரில் அளித்து அல்லது பிற்பகல் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில்மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் அளித்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.