கோவையில் சமூக நீதி கூட்டமைப்பு மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பாக இந்திய இறையாண்மையும்,இந்திய ஜனநாயகமும் இன்றைய நிலை எனும் கருத்தரங்கம் நடைபெற்றது..
கோவையில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா கூட்டமைப்பு,சமூக நீதி கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து,இந்தியாவின் இறையாண்மையும்,இந்தியாவின் ஜனநாயகமும் இன்றைய நிலை எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது..கோவை உக்கடம் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள தாஜ் டவர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சமூக நீதி கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் டாக்டர் ஜி.முகம்மது ரபீக் தலைமை வகித்தார்...மாநில தலைவர் ஆறுமுகம்,மாநில செயல் தலைவர் இராம.வெங்கடேசன்,பொருளாளர் அருள்தாஸ்,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பர்வேஷ்,மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கருத்தரங்கில்,தொழிற்சங்க கூட்டமைப்பின் பொது செயலாளர் கவிஞர். குரு நாகலிங்கம்,திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பு செயலாளர் கா.சு.நாகராசன்,ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். இந்தியாவின் இறையாண்மைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே அரசு, ஒரே தலைவர் என்ற கொள்கையை நம் மீது திணிக்க முயற்சி செய்து வருகின்றனர். மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. அத்தகைய உணர்வின்றி மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்..
கருத்தரங்கில் தமிழக அரசு தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்..அப்போது பேசிய அவர்,இந்தியாவின் கய கூட்டாட்சி கொள்கை மிகப்பெரிய தாக்குதலில் இருப்பதாக கூறிய அவர், வேற்றுமையில் ஒற்றுமை,நாட்டில் அனைவருக்கும் சம உரிமை என்பதே கூட்டாட்சித் தத்துவம் எனவும்,உலகிலேயே அதிக ஜாதி,மத,இன வேறுபாடுகளை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும்,ஒற்றுமையில் இந்தியா போல் எந்த நாடும் இல்லை என தெரிவித்தார்.அதற்கு இந்திய நாட்டின் அரசியலமைப்பும்,சட்டங்களுமே காரணம் என சுட்டிகாட்டினார்..தொடர்ந்து நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறிய அவர்,வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து பதிலளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில்,கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை அவர் துவக்கி வைத்தார்..