போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் - சுற்றுப்பயணத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

 

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை  மாநில அரசு உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுற்றுப்பயணத்தில் பேசினார்.

சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; மத்திய அரசு  ஏழை எளிய மக்களுக்காக, இலவச கேஸ் இணைப்பு, குடிநீருக்காக ஜல் ஜீவன் திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், ஆயுள் காப்பீட்டு திட்டம், ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இப்படி 9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மட்டும் 16 லட்சம் கோடி நிதி  அளித்துள்ளது. மேலும் இந்தியா 2047ஆம் ஆண்டுக்குள் வல்லரசாக,  வளர்ச்சியடைந்த நாடக  மாறாக வேண்டும் என்ற நோக்கில் விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து,சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டங்களை எல்லாம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக, நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற விழிப்புணர்வு யாத்திரை கிராமம் தோறும் சென்று வருகிறது. பண்டிகை காலம் என்பதால் பொதுமக்களின் சிரமம் கருதி போக்குவரத்து தொழிற்சங்கத்தினரிடம்  மாநில அரசு கோரிக்கைகள் குறித்து விரைந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றார். இதையடுத்து  மத்திய அரசின் உஜ்வாலா, ஆயுஷ்மான் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், ஆயுஷ்மான் திட்ட அட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். 


இதற்கு முன்னதாக சேவூர் அருகே கானூர் ஊராட்சி, பெரிய கானூரிலும்,
முறியாண்டம்பாளையம் ஊராட்சியிலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Previous Post Next Post