கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் மொத்தம் 2220 (ஆண்- 1431, பெண்-789) நபர்களுக்கு வருடந்தோரும் வழங்கப்படும் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை மேயர்.கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார். உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் க.சிவகுமார், பொது சுகாதாரகுழு தலைவர் பெ.மாரிச்செல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், நகர் நல அலுவலர்(பொ) மரு.வசந்த் திவாகர், உதவி ஆணையர்கள் செந்தில்குமரன்(மத்தியம்), பிரேம் ஆனந்த்(தெற்கு), மண்டல சுகாதார அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், குணசேகரன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.