பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற கோலப்போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பாக பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது..சோமையாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிநாயக்கன் பாளையம் 10 வது வார்டு முத்துசாமி நகர் பகுதியில் நடைபெற்ற இதில் நூறுக்கும் மேற்பட்ட பெண்கள், கலந்து கொண்டு பல்வேறு வண்ணம் மற்றும் டிசைன்களில் கோலம் போட்டனர். அவரவர் வீடுகளின் முன்பாக பூக்களாலும்,வண்ண்பொடிகளாலும் போடப்பட்ட கோலங்கள் அந்த பகுதியில் வண்ணமயமாக காட்சியளித்தன.தொடர்ந்து சிறந்த மூன்று கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகளும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் Dr எஸ்.ராமநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர் ரங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.விழாவில் கவுன்சிலர் ராமு,அகில பாரத மக்கள் கட்சியின் வடவள்ளி மண்டல தலைவர் வினோத்,இளைஞரணி தலைவர் சதீஷ்,மகளிரணி மாவட்ட தலைவி இந்திரா,ஊடக பிரிவு தலைவர் நாகராஜ்,விஷ்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்..