கொங்கு மண்டல மாநாட்டிற்கான கால்கோல் விழா கொ.ம.தே கட்சியின் பொதுச் செயலாளர் இஆர்.ஈஸ்வரன் பங்கேற்பு

 கொங்கு மண்டல மாநாட்டிற்கான கால்கோல் விழா கொ.ம.தே கட்சியின் பொதுச் செயலாளர்  இஆர்.ஈஸ்வரன் பங்கேற்பு


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொங்கு மண்டல மாநாடு வரும் பிப்ரவரி 4 ந்தேதி நடைபெறுகிறது.மாநாட்டிற்கான கால்கோள் விழா பொதுச் செயலாளர் இ.ஆர்.  ஈஸ்வரன் முன்னிலையில் நடந்தது.அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது,கொங்கு மண்டலத்தின் தேவைகள், விவசாயிகளின் கோரிக்கைகள்,பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்சனைகளை ஆகியவைகளைவலியுறுத்தியும்,

இந்த மாநாடு நடைபெறுகிறது,மாநாட்டையொட்டி கொங்கு மண்டலத்தில் இருந்து 12 ஆயிரம் பேர் உலக சாதனை நிகழ்த்துவதற்காக வள்ளி கும்மி ஆட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்,ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் அப்படி வழங்குவது மூலம் தென்னை விவசாயம்காக்கப்படும் என்றார்.இந்த மாநாட்டின் ஒற்றைகொள்கை என்னவென்றால் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியை உறுதி செய்வது தான்இந்த மாநாட்டின் நோக்கமாகும். வள்ளி கும்மியாட்டம் மூலம் நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காப்பாற்ற முடியும், பெண் குழந்தைகளுக்கு ஒரு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் என்றார். கள்ளுக்கு அனுமதி வேண்டும் என்பது மாநாட்டில் வலுவாக இருக்கும்தமிழக அரசும் ஆளுநரும் இனக்கமாக இருந்தால் வலுவாக இருக்கும் என்றார்.கொஞ்ச காலமாக பிசிஆர் வழக்குகள் கொஞ்சம் அடங்கி இருந்தது.மீண்டும் அதிகமாகி உள்ளது உண்மைதான் பிசிஆர் ரில் போடப்படும் பொய் வழக்குகளை விடுவது கிடையாது.எல்லா விஷயங்களையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறேன்.தவறு யார் செய்தாலும் அதை விடக்கூடாது ஆனால் நிரபராதிகளை மிரட்டிகுற்றவாளிகளாக மாற்றுவதற்குமுயற்சிக்கக் கூடாது என்று கூறினார். இதில் எம்.பி.சின்ராஜ்,தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல்,துணைப் பொதுச் செயலாளர் சக்தி கோச் நடராஜ்,மாநில பொருளாளர் கே கே சி பாலு,மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் துரைராஜா,மாவட்டச் செயலாளர்கள்சிவராஜ், (ஈரோடு மேற்கு), சாமிநாதன் (ஈரோடு தெற்கு), ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தராஜன், பிரபாகர், முத்துசாமி, மாவட்ட கவுன்சிலர் சிவகாமி தங்கவேல், உட்பட ஏராளமானமாநில,மாவட்ட,ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post