பவானிசாகரில் மனைவியை பிரிந்ததால், மதுபோதைக்கு அடிமையான தொழிலாளி. தூக்கு மாட்டி தற்கொலை.


மதுரை ஆனையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் நாகேந்திர பாலன்.இவரது மகன் தேனி (எ) டெனிகரன் (வயது40) இவருக்கு திருமணம் ஆகி, கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மனைவி மதுரை முகாமில் வேறொரு வரை திருமண செய்து கொண்டு வாழ்ந்து வருவதால், டெனிகரன் தற்போது, பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வுமுகாமில்  தனியாக குடியிருந்து கொண்டு, பணிக்கு சென்று வந்த நிலையில்,தனது, மனைவியை பிரிந்த சோகத்தில், டெனிகரன் குடிப் பழக்கத்திற்கு  அடிமையாகி உள்ளார். 

மேலும் டெனிகரனின் தாயாருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலை யில்,  நேற்று பணிக்கு சென்று திரும் பிய இவர், இரவு 10.00 மணிக்கு  வீட்டு க்கு சென்றவரை,  இன்று காலை 7 மணிக்கு, டெனிகரனுடன் வேலை செய்யும் டிரோஷன் என்பவர்  இவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, டெனி கரன்வீட்டில் லுங்கியால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு, அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரி வித்துஉள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து, தகவல் அறிந்த பவானிசாகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து, பிரேதத்தை கைப்பற்றி, உடலை சத்தியமங்கலம் அரசு மருத் துவமனைக்கு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்து, விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post