கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலய வளாகத்தில் ஜப்பான் நாட்டின் பிரபல கியோ குஷின் காய்கன் கராத்தே போட்டிகள் நடைபெற்றது

கோவையில் ஜப்பான் நாட்டின் பிரபல  கியோ குஷின் காய்கன்  கராத்தே போட்டிகள் நடைபெற்றது.சின்னவேடம்பட்டி கவுமார மடாலய வளாகத்தில் நடைபெற்ற இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த  மாணவ,மாணவிகள் ஆர்வமுடன்  கலந்து கொண்டனர்…
தற்காப்பு கலையில் பிரபலமான  ஜப்பான் நாட்டின் கியோ குஷின் காய்கன் கராத்தே போட்டி கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலய வளாகத்தில்  நடைபெற்றது.. கியோ குஷின் சர்வதேச கராத்தே அமைப்பின் இந்திய கிளை தலைவரும் ஐந்தாவது டான் பட்டம் பெற்ற  சிஹான் ஆனந்த்லால் ராஜூ, தலைமையில் நடைபெற்ற போட்டிகளை சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் துவக்கி வைத்தார்.போட்டிகளை கோவை மாவட்ட கியோகுஷின் கராத்தே சங்கத்தின் தலைவர் சென்ஷாய் ராஜ் குமார் ஒருங்கிணைத்தார்..கட்டா குமித்தே என இரு பிரிவுகளாக நடைபெற்ற இதில் கோவை,மதுரை,திருச்சி,கன்னியாகுமரி மார்த்தாண்டம் பகுதி  என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்..ஜூனியர்,சப் ஜூனியர்,சீனியர் மற்றும் ஆண்கள் பிரிவு என நடைபெற்ற போட்டிகளில் ஆக்ரோஷமாக வீர்ர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்..தற்காப்பு கலையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கலையை தற்போது இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் கற்று வருவதாகவும்,உலக அளவில் பிரபலமான  இது போன்ற கலைகளை பள்ளிகளில் தனி வகுப்பாக எடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என ஷிஹான் ஆனந்த்லால் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.. போட்டியில் கியோகுஷின் கராத்தே பயிற்சியாளர்கள் ரவிக்குமார்,ஜஸ்டின்,ராஜ்குமார்,சண்முகம்,பிரகாஷ்,சோமேஷ்,சூப்பர் ஜிம் கருணா பிரபு  உட்பட பலர் கலந்து கொண்டனர்..
Previous Post Next Post