அரசு சம்பள பேச்சுவார்த்தையில் பிடிவாதமாக இருப்பதால் வேலை நிறுத்தம் செய்ய முடிவு...அண்ணா தொழிற்சங்கப்பேரவையின் துணை செயலாளார் பொன் தனபாலன் பேட்டி..

அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்  திருப்பூர் மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்புறம் வாயிற்கூட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்கப்பேரவையின் துணை செயலாளார் பொன் தனபாலன், திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ்.கண்ணபிரான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.


அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தினை தொடர்ந்து  அண்ணா தொழிற்சங்கப்பேரவையின் துணை செயலாளார் பொன் தனபாலன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சம்பள பேச்சுவார்த்தை இதுவரை நடந்து வந்தது. 14 வது சம்பள பேச்சுவார்த்தையில் அரசாங்கம் பிடிவாதமாக இருந்து மூன்று ஆண்டு என்பதை நான்காண்டுகளாக மாற்றியது. நான்காண்டுகள் முடிந்தும் 15 வது சம்பள பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். 

ஆனால் அழைக்கவில்லை. புதிய சம்பளம் போட வேண்டும். அதையும் அரசாங்கம் செய்யவில்லை. அதனால் தான் தொழிலாளர்கள் எதிர்ப்பை காட்டுகிற வகையில், அனைத்து தொழிலாளர்கள் விருப்பத்திற்கு இணங்க வருகிற 4-ந்தேதி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தோம். ஸ்டிரைக் செய்வதாக முடிவெத்து இருக்கிறோம். மற்ற துறைகளில் எல்லாம் டி.ஏ., கொடுக்கிறார்கள். போக்குவரத்து துறையில் 98 மாதங்களாகியும் கொடுக்கவில்லை. கோர்ட் சொல்லியும் கொடுக்காமல் இருக்கிறார்கள். 

கேட்டால் நிதியில்ல்லை என்கிறார்கள். ஒரு நாளைக்கு 5 டியூட்டி பார்க்கிறோம். பணம் இல்லை என்று சொல்வதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். ஊழியர்களை பலிவாங்கும் விதமாக 600 கி.மீ., தூரம் ஓட்ட சொல்கிறார்கள். சின்ஞ்சிறு இழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? எடப்பாடியார் காலத்தில் 13 ஆயிரம் பேர் நியமனம் செய்தார்கள். இந்த ஆட்சியில் செய்யவில்லை. ஒரு வண்டி கூட புது வண்டி விடவில்லை.  நினைச்சதுக்கு எல்லாம் டிரான்ஸ்பர் போடுகிறார்கள். 3 இல் ஒரு பங்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. 

பழைய வண்டிகளில் புது பாடி கட்டி அதை புதிது போல ஓட்டுகிறார்கள். என்றார். அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் சிவக்குமார், மண்டல பொருளாளர் பொன்னுசாமி,  கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் தங்கவேல், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பேரவை செயலாளர் இருளப்பன், பி.எம்.எஸ்., மாவட்ட செயலாளர் மாதவன், மண்டல துணை தலைவர் ஜீவா ரவிக்குமார், திருப்பூர் மண்டல கிளை செயலாளர்கள் குணசேகரன், சரவணன், ரவிபிரபு, குமாரசாமி, சதீஷ்குமார், சிவக்குமார், சபாபதி, மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தார்கள். 

Previous Post Next Post