முன்னாள் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்

 

ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்

ஈரோடு கிழக்குத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.முன்னதாக பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் வைக்கப்பட்டிருந்த திருமகன் ஈவெரா உருவப்படத்துக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, பெரியார் மன்றத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் நாசே.ஜெ.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரன், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் ஆர்.செல்வராஜ், திமுக மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சிபிஐ தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சாதிக், தி.க.அமைப்புச் செயலாளர் த.சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து புகழஞ்சலி செலுத்திப் பேசினர்.

இக்கூட்டத்தில், எம்.பி. கணேச மூர்த்தி பேசுகையில், “அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்கள் திருமகன் ஈவெராவை பின்பற்றி வரலாம் எனும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்தன” என குறிப்பிட்டுப் பேசினார். தொடர்ந்து, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி பேசுகையில், “ராமுவை (திருமகன் ஈவெராவின் மற்றொரு பெயர்) என்றென்றும் என்னால் மறக்க முடியாது” என நெகிழ்ச்சியுடன் கூறி, ஒற்றை வரியில் தனது புகழஞ்சலியை நிறைவு செய்தார்.இந்தக் கூட்டத்தில்,முன்னாள் மாவட்டத் தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், கவுன்சிலர் ஈ.பி.ரவி,    காங்கிரஸ் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு செல்வம், துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா,   சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் கே.என்.பாஷா மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post