கோவை விழாவிற்கு டபுள் டக்கர் பேருந்து பயண அனுபவம் கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக,பேருந்தில் பயணம் செய்த பப்புவா நியுகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு தெரிவித்துள்ளார்..
கோவையின் பெருமைகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில், கடந்த 16 ஆண்டுகளாக கோவை விழா கொண்டாட பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஜனவரி கடந்த வாரம் கோவை விழா கொண்டாடபட்டது இதில் பல்வேறு நிகழ்ச்சிகள், நடத்த பட்டது, மேலும் கோவை மக்களின் மனதில் இடம் பிடித்த டபுள் டக்கர் பேருந்து இந்த ஆண்டும் இயக்க பட்டது, இந்த பேருந்தில் இந்தியா, மற்றும் பப்புவா நியுகினியா நாட்டின் வர்த்தக ஆணையரும்,தி.மு.க.நிர்வாகியும் ஆன விஷ்ணு பிரபு பயணம் செய்து தனது பேருந்து பயண அனுபவங்களை செய்தியாளர்களிடம் கூறினார் அப்பொழுது அவர் கூறுகையில்..
கோவை விழா 16 வது ஆண்டாக இந்த ஆண்டு சிறப்புமிக்க நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகின்றது, இந்த கோவை விழா நிகழ்ச்சிகளில் கோவை மட்டுமின்றி, பல மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் கோவைக்கு வந்து சிறப்பித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளை நமது மாநகராட்சி நிர்வாகம் திறம்பட செய்துள்ளது, இதற்கு உறுதுணையாக, நித்தின், ஆதர்ஷ், சஞ்சய், அபிஷேக் கார்லு, உள்ளிட்டவர்கள், மாநகராட்சியுடன் இனைந்து இந்த விழாவை சிறப்பித்து வருகின்றனர். கோவை விழா என்றாலே ஒரே நிகழ்ச்சிகளை நடத்தாமல் புதிய புதிய யுக்திகளை கையாளுவது மேலும் இந்த விழாவுக்கு பெருமை சேர்க்கின்றது என்றார். மேலும் இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பொழுது பார்த்த இந்த டபுள் டக்கர் பேருந்தில் பயணம் செய்வது,கோவை விழாவிற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதோடு,உள்ளூர் மக்கள், மற்றும் குழந்தைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்..