கோவை வாசவி வித்யாலயா பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாக்கத்தான்..!
கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் வாசவி வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் இணைந்து பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த ஆண்டு முதல் மாதத்தில் இருந்து அனைவரும் கட்டாயம் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த உறுதி மொழி ஏற்று வாக்கத்தான் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்த வாக்க்கதான் நிகழ்ச்சியை காவல் உதவி ஆய்வாளர் பரமன் மற்றும் துணை முதன்மை போக்குவரத்து காப்பாளர் ரங்கபிரபு கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வாக்கத்தான் நிகழ்ச்சியில் கட்டாயம் ஹெல்மெட் அணிவது,விபத்து எதிர்பாராத அழிவு,பாதுகாப்பு என்பது வருமுன் காக்கும் செயல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நடந்து சென்றனர்.தொடர்ந்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பாடல்களுக்கு நடனமாடியும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.