கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அருகே உள்ள பெள்ளேபாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையத்தில் தை திருநாளை முன்னிட்டு இரணியனை வதம் செய்வதற்கு எடுத்த நரசிம்ம அவதார நாடகமான இரண்ய நாடக தெருக்கூத்து மிக சிறந்த முறையில் நடைபெற்றது.இதனை முன்னின்று நடத்தும் நாடக ஆசிரியர் கோவிந்தராஜ் கூறுகையில் இந்த நாடகம் 300 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.அந்த காலகட்டத்தில் கொடிய நோய்கள் தாக்கி வந்த நிலையில் என்ன செய்வது என்று அறியாது நாராயணமூர்த்தியை வணங்கி இந்த நாடகத்தை நடத்தியதாகவும் அதை தொடர்ந்து இப்போது வரையிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.இந்த நாடகத்தில் பங்கேற்கும் நடிகர்கள் வெளியூரில் வேலையில் இருந்தாலும் இந்த நாடகத்திற்கு வந்து விடுவார்களாம். இந்த நாடகத்தில் இரணியன் வேடத்தில் செந்தில்,வர்ணன்,பார்த்திபன் நரசிம்ம வேடத்தில் சிவக்குமார்,நீலாவதியாக முத்துக்குமார்,பிரகல்நாதனாக ஹரி பிரசாத் மற்றும் கார்த்தி, சுக்கிராச்சாரியார் வேடத்தில் பிரபு,கவின்.எமன் வேடத்தில் ரகு,மல்லர்களாக மாணிக்கம்,குப்புராஜ் மற்றும் 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்தார்கள்.இந்த நாடகம் தைத்திருநாள் இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 8 மணிவரை நடந்தது.இந்த நாடகத்தை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொது மக்கள் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொட்டும் பனியும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்தார்கள்.