ஈரோடு மாவட்டம்,கோபி வட்டம் அளுக்குளி கிராமம் பழமைவாய்ந்த அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது
கடந்த 22ந்தேதி பூச்சாட்டுதல் தொடங்கி, 28ந் தேதி நந்தா தீபம் ஏற்றி, கிராமசாந்தியுடன் விழா தொடங்கியது. அதனை அடுத்து ஜனவரி 3 ந் தேதி கொடியேற்று விழா, அம்மை அழைத்தல் நடைபெற்றது.
இன்று அதிகாலையில் அம்மனுக்கு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு 60 அடி திருக் குண்டத்திற்கு தலைமை பூசாரிகள் செந்தில் மற்றும் மூர்த்தி பூஜை செய்து குண்டம் இறங்கி தொடங்கிவைத்தார், அதனை தொடர்ந்து விரதமிருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்,
வெள்ளிக்கிழமை மாலை பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுக்கும் தேர்திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு கடத்தூர்ஆய்வாளர் துரைபாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவில் கோபி யூனியன் சேர்மன் வக்கில் மெளதீஸ்வரன், அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதிபாண்டு உட்பட கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுக்கள் கலந்துகொண்டனர்.