2024-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம், தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்ப மற்றும் ரூ.1000/- ரொக்க பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசால் கடந்த 06.01.2024 ல் ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. இப்பரிசு தொகுப்பு ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாராகள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட உத்தரவிடப்பட்டது. மேலும், கடந்த 09.01.2024 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் 2024-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத் தொகை ரூ.1000/- சேர்த்து வழங்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 07.01.2024 முதல் 09.01.2024 முடிய டோக்கன் வழங்கப்பட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு 10.01.2024 முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது நாள் வரை டோக்கன் பெறாமல் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் 12.01.2024 முதல் 14.01.2024 முடிய அந்ததந்த பகுதிக்குட்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு நேரடியாக சென்று மேற்படி பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.