கோவை செல்வபுரம் வடக்கு ஹிதாயுத்துல் இஸ்லாம் ஷாபியா சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் புதிதாக அமைக்கப்பட்ட மதீனா குப்பா எனும் டூம் திறப்பு விழா

கோவை செல்வபுரம் வடக்கு ஹிதாயுத்துல் இஸ்லாம் ஷாபியா  சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில்,புதிதாக அமைக்கப்பட்ட  மதீனா குப்பா  எனும் டூம் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள  ஹிதாயுத்துல் இஸ்லாம் ஷாபியா  சுன்னத் ஜமாத் பள்ளிவாசலின் உச்சியில்  மதீனா குப்பா எனும் புதிய டூம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.வெகு தூரத்தில் இருந்தாலும் காட்சியளிக்க கூடிய இந்த மதீனா குப்பாவின்  பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி வாசலின் தலைவர் முனைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இதில்,செயலாளர் ஹபீப் அனைவரையும் வரவேற்று பேசினார்.தலைமை இமாம் முகம்மது அன்சர் இம்தாதி கிராத் ஓதினார்..நிர்வாகிகள் அப்பாஸ்,துணை செயலாளர் அஹமது,மேனேஜர் குஞ்சு முகம்மது,முத்தவல்லி ,சுலைமான்,துணை தலைவர் கிதர் பாஷா,ஆகியோர் முன்னிலை வகித்தனர்…நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் தலைவர் இனாயத்துல்லா,உதவி கமிஷனர் ரகுபதி ராஜா,தி.மு. மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ்,சென்னை மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் சம்சு அலி,மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் கோவை சுலைமான்  உட்பட முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு புதிய டூமை திறந்து வைத்தனர்..இந்நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் துணைச்செயலாளர் கோவை பைசல் செல்வபுரம் தெற்கு ஜமாத் தலைவர் ஹாஜி இப்ராஹிம் வடக்கு ஜமாத் செயலாளர் நோபல் பூ மார்க்கெட்  ஜமாத் தலைவர் சவுக்கத் அலி கேரள ஜமாஅத் தலைவர் ஹாஜி உசேன் ஏ ஒன் பேரிச்சம்பழம் அருண் பாண்டியன் ஆர் ஆர் மஹால் ராஜா பெட்ரோல் பங்க் சிவசுப்பிரமணியம் முருகன் கோயில் தலைவர் செந்தில், திருமறை நகர் ஜமாத் தலைவர் ஹாஜூ ஆப்பிள் சூப்பர் மார்க்கெட் ஜெயினுலாப்தின்,பெயிண்டர் முகமது ரபீக் மற்றும்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினை ஜமாத்தின் செயற்குழு உறுப்பினர்கள் செய்யது அபுதாஹிர் சுலைமான் சிக்கந்தர் அமானுல்லா முகமது ஜக்கரியா அலியார் முகமது அலி நூறு முஹம்மது ஜாகிர் உசேன், சாதிக் பாஷா கிரில் பஷீர் ஆகியோர் செய்திருந்தனர்.இறுதியில் ஆடிட்டர் காதர் மைதீன் நன்றியுரை வழங்கினார்..
Previous Post Next Post