கோவையில் ஜி.ஆர்.ஜி நிறுவனர் தினம் மற்றும் தெய்வத்திருமதி சந்திரகாந்தி அம்மாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது..
ஜி.ஆர்.ஜி நிறுவனர் தினம் மற்றும் தெய்வத்திருமதி சந்திரகாந்தி அம்மாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கோவை ஜி.ஆர்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது… ஜி.ஆர்.ஜி.குழுமங்களின் நிர்வாக அறங்காவலர், ஜி.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இதில், ஜி.ஆர்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி முன்னிலை வகித்தார்..விழாவில் சிறப்பு விருந்தினராக, ராஜஸ்தானின் தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் கலந்து கொண்டார்..விழாவில் முன்னதாக, பூ.சா.கோ. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி ஆகிய நிறுவனங்களிலிருந்து 7 அணிவகுப்புப் படைகள் அணிவகுக்க விளையாட்டு மைதானத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து கல்லூரியின் நிறுவனர் தெய்வத்திருமதி சந்திரகாந்தி அம்மாவின் சிறப்பு ஆளுமையைச் சித்திரிக்கும் வகையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சிறப்புப் பாடலுக்கு 408 மாணவியர்கள் மாபெரும் நடன நிகழ்ச்சி நடத்தி அசத்தினர்..இதனை தொடர்ந்து ஜி.ஆர்.ஜி நூற்றாண்டு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,. நிர்வாக அறங்காவலர், ஜி.ரங்கசாமி வரவேற்புரை நல்க ஜிஆர்ஜி மேலாண்மைக் கல்வி இயக்குனர் டாக்டர் பி.சதாசிவம் சந்திரகாந்தி பெண்கள் தலைமைத்துவ மையத்தின் சிறப்புச் செயல்பாடுகள் குறித்தும், கல்லூரியின் செயலர் டாக்டர் நா. யசோதா தேவி மேம்பட்ட பொருட்கள் மற்றும் நிலையான தொழில் நுட்பங்களுக்கான மையத்தின் பணிகள் குறித்தும் துணை முதல்வர் டாக்டர் பி.பி. ஹாரத்தி கல்வி வளர்ச்சிக்கான ஜி.ஆர்.ஜி. இன்குபேட்டர் பற்றிய குறிப்பினையும் வழங்கினர்...தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,கல்லூரியின் சேர் பெர்சன் டாக்டர் நந்தினி ரங்கசாமி பெண்களுக்கான சந்திரகாந்தி நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கான சான்றிதழை புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குநர் ஜெனரல் திருமதி சுனிதா நரேன்,மற்றும் மும்பையின் சரணாலயம் இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் ரந்தீர் (பிட்டு) சாகல் ஜிஆர்ஜி நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதும் சான்றிதழையும் இருவருக்கும் வழங்கினார்..
இதைத் தொடர்ந்து கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் சிறப்பினைப் பறைசாற்றும் வகையில் பிராண்ட் அம்பாசிடர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.. கல்லூரியின் முதல்வர் டாக்டர் ப.மீனா கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களான திருமதி. ஸ்வர்ணலதா ராமச்சந்திரன், செல்வி சி.கிரிஜா மற்றும் செல்வி டி.எஸ்.ஷோபா ஆகியோருக்கான சிறப்புகளை வாசிக்க, நிர்வாக அறங்காவலர் . கோ.ரங்கசாமி விருது வழங்கி கவுரவித்தார்.. நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினரான ராஜஸ்தானின் தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் ,டாக்டர் ராஜேந்திர சிங்,பேசுகையில் இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும்,குறிப்பாக , நதி பாதுகாப்பு கொள்கைகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என கூறினார்..நதிகள் மற்றும் இயற்கை வளங்களை அதிகமாக சுரண்டுவது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்த அவர்,.இயற்கை விவசாயம் என்றுமே பசுமையை பாதுகாக்கும் என தெரிவித்தார்.. வரும் காலங்களில் நவீன பொறியியல் கணிணி போன்ற தொழில்நுட்பங்கள் சுற்றுச்சூழல்,இயற்கை போன்றவற்றை பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்..கே.பி.ஆர்.கல்வி குழுமங்களின் தலைவர் ராமசாமி,அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன்,பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் அஜீத் குமார் லால் மோகன்,மற்றும் ஏ.வி.வரதராஜ்,வனிதா மோகன்,கிருஷ்ணராஜ வானவராயர்,சி.ஆர்.ஐ.சௌந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..நிகழ்ச்சியில் இறுதியாக,G.R.G.CAS மற்றும் OIR இயக்குனர் பேராசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் நன்றியுரை வழங்கினார்..