கோவை அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் -அகில இந்திய சான்றோர் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் சதா நாடார் பேட்டி..
அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் அகில இந்திய சான்றோர் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் A.N சதா நாடார் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், எடப்பாடி பழனிச்சாமி அடுத்த தேர்தலில் போட்டியிட சீட்டு தருவதாக கடந்த ஆண்டில் சொல்லிவிட்டு தற்போது ஏமாற்றி விட்டார் எனவும், வரும் நாடுளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.
அதேபோல தான் தயாரித்து, இயக்கிய ல்தகா சைஆ எனும் படத்தை வேறு நபருக்கு விற்பனை செய்ய விடாமல் எடப்பாடி பழனிச்சாமி தடுத்து வருவதாகவும்,வேண்டுமென்றே தனக்கு எதிரான வேலைகளை இவர் செய்து வருவதாக குற்றம் சாட்டிய அவர் எடப்பாடி பழனிச்சாமியை தவிர்த்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தனக்கு நெருக்கமானவர்கள் எனவும் வரும் தேர்தலில் நாடார் சங்கங்களின் ஓட்டுகள் அதிமுகவினர்க்கு கிடைக்காது என தெரிவித்தார்.